இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - வாட்லிங் சதத்தால் நியூசிலாந்து அணி 394 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 394 ரன்கள் குவித்துள்ளது.
சாட்னர் - வாட்லிங்
சாட்னர் - வாட்லிங்
Published on

மவுன்ட்மாங்கானு:

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து இருந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. நிக்கோலஸ் - வாட்லிங் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிக்கோலஸ் 41 ரன்கள் எடுத்திருந்த போது ரூட் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் வெளியேறினார்.  அடுத்து வந்த  கிராண்ட்ஹோம் அவருக்கு சிறப்பான பாட்னர்சிப் கொடுத்தார். அபாரமாக விளையாடிய வாட்லிங் 251 பந்துகளில் 12 பவுண்டரியுடன் அவர் சதம் அடித்தார்.

64-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 8-வது சதமாகும். அவருக்கு  உறுதுணையாக இருந்து கிராண்ட்ஹோம் 65 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சாட்னர், வாட்லிங் உடன் ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 394 ரன்கள் எடுத்திருந்தனர். சாட்னர் 103 பந்துகளில் 31 ரன்களிலும் வாட்லிங் 298 பந்துகளில் 119 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் சாம் குர்ரான், பென் ஸ்டோர்க்ஸ் தலா 2 விக்கெட்டும் ஜாக் லீச், ஜோ ரூட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com