டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தலாய்லாமா வாழ்த்து

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திபெத் ஆன்மிக தலைவர் தலாய்லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால், தலாய்லாமா
அரவிந்த் கெஜ்ரிவால், தலாய்லாமா
Published on

புதுடெல்லி :

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திபெத் ஆன்மிக தலைவர் தலாய்லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘‘டெல்லி மக்கள் தங்களது தலைமையால் தொடர்ந்து பலன் அடைவார்கள். அரசு பள்ளிகளில் மகிழ்ச்சியான பாடத்திட்டம் தொடங்கியதன் மூலம் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை வடிவமைக்கும் தங்களது அக்கறை தெளிவாகிறது. இந்த நடவடிக்கை, குழந்தைகளின் ஒட்டுமொத்த கல்வியில் நல்ல விளைவை ஏற்படுத்தும். இந்தியா முழுமைக்கும் நீங்கள் நல்ல பாதையை காட்டி இருக்கிறீர்கள்’’ என்று தலாய்லாமா கூறியுள்ளார்.

அவரது வாழ்த்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com