திருபுவனையில் சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயரிங் பட்டதாரி பலி

திருபுவனையில் சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயரிங் பட்டதாரி இறந்து போனார். பிளஸ்-2 மாணவர் படுகாயம் அடைந்தார்.
திருபுவனையில் சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயரிங் பட்டதாரி பலி
Published on

வில்லியனூர்:

கண்டமங்கலத்தை சேர்ந்தவர் ஜவகர். இவரது மகன் மனோபாரதி (வயது23), பி.டெக். பட்டதாரி. நேற்று மாலை இவர் தனது வீட்டில் இருந்து மதகடிப்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். திருபுவனை கூட்டுறவு நுற்பாலை அருகே சென்ற போது அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சண்முகப்பிரியன் (17) என்பவர் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மனோபாரதி மற்றும் சண்முகபிரியன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மனோபாரதி பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே மனோபாரதி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள், பாஸ்கரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com