காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தங்கம் வென்றார்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் இந்தியாவுக்கு 26வது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தார். #CommonWealthGames2018 #CWG2018 #SainaNehwal
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தங்கம் வென்றார்
Published on

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 10-வது நாளாக ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர்.  

இன்று நடைபெற்ற மகளிர்கான பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் பி.வி. சிந்துவை எதிர்த்து களம் இறங்கினார். இந்த போட்டியில் பி.வி.சிந்துவை 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றார். தோல்வியடைந்த பி.வி.சிந்துவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com