கேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து 23 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் சேர்த்துள்ளது.
நிக்கோல்ஸ்
நிக்கோல்ஸ்
Published on

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஹென்ரி நிக்கோல்ஸ், மார்ட்டின் கப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்ட்டின் கப்தில் 18 பந்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஹென்ரி நிக்கோல்ஸ் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. குறிப்பாக கேன் வில்லியம்சன் தொடக்கத்தில் 24 பந்தில் நான்கு ரன்களே அடித்திருந்தார். அதன்பின் நேரம் செல்ல செல்ல இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் நியூசிலாந்து 21.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இதனால் நியூசிலாந்து மிகப்பெரிய அளவில் ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 23-வது ஓவரின் 4-வது பந்தில் கேன் வில்லியம்சன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நிக்கோல்ஸ் 45 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com