‘வாட்ஸ்அப்’ மூலம் சமையல் கியாஸ் முன்பதிவு செய்ய பாரத் கியாஸ் நிறுவனம் ஏற்பாடு

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் சமையல் கியாஸ் முன் பதிவு செய்யும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
சமையல் கியாஸ்
சமையல் கியாஸ்
Published on

ஸ்மார்ட் போன் மூலமாக வீட்டுக்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை பெறக்கூடிய வசதி இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் உள்ளது.

சமையல் கியாஸ் முன்பதிவு செய்ய செல்போனிலிருந்து எஸ்.எம்.எஸ். செய்யும் வசதி ஏற்கனவே உள்ளது. தற்போது வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய 2 நிறுவனமும் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.

இண்டேன் கியாஸ் வாடிக்கையாளர்கள் 75888 88824 என்ற எண்ணிலும், இந்துஸ்தான் பெட்ரோலியம் வாடிக்கையாளர்கள் 92222 01122 என்ற எண்ணிலும், வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட் போனில் 18002 24344 என்ற எண்ணிற்கு ‘ஹாய்’ என்று மெசேஜ் அனுப்பினால் அவர்களின் எண் பதிவு செய்யப்படும். அந்த எண்ணில் இருந்து புக் அல்லது 1 என்று அனுப்பினால் சமையல் கியாஸ் முன்பதிவு உறுதி செய்யப்படும்.

தமிழகம் முழுவதும் 53 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற முடியும் என்று பாரத் பெட்ரோலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com