

இந்த ஆட்டம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. மான்செஸ்டர் அணிக்கான நீண்ட காலம் விளையாடியவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார். தற்போது யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
பழைய கிளப் உடன் மோதுவதற்கான ரொனால்டோ ஓல்டு டிராஃபோர்டிற்குச் சென்றார். ரொனால்டோவை காண மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். நேற்றிரவு நடைபெற்ற மான்செஸ்டர் அணிக்கெதிரான ஆட்டத்தில் யுவான்டஸ் 1-0 என வெற்றி பெற்றது.
ஆட்டம் முடிந்ததும் ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் ரொனால்டோவுடன் செல்பி எடுக்க மைதானத்திற்குள் நுழைந்தனர்.