கரீபியன் பிரிமீயர் லீக்: லென்டில் சிம்மன்ஸ் 63 பந்தில் 96 ரன்கள் விளாச டிரின்பாகோ வெற்றி

கரீபியன் பிரிமீயர் லீக்கில் லென்டில் சிம்மன்ஸ் 63 பந்தில் 96 ரன்கள் விளாசியதால், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 59 ரன்னில் வெற்றி பெற்றது.
லென்டில் சிம்மன்ஸ்
லென்டில் சிம்மன்ஸ்
Published on

கரீபியன் பிரிமீயர் லீக்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் விளாசியது. தொடக்க வீரர் லென்டில் சிம்மன்ஸ் 63 பந்தில் 7 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 96 ரன்கள் விளாசினார். டேரன் பிராவோ 36 பந்தில் 36 ரன்கள் அடித்தார்.

பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி களம் இறங்கியது, அந்த அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் டிரின்பாகோ 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com