கரீபியன் பிரிமீயர் லீக்: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் கேப்டனாக பொல்லார்டு நியமனம்

கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொல்லார்டு
பொல்லார்டு
Published on

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 லீக் தொடரை போன்று வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் நடத்தப்பட்டு வருகிறது. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த அணி இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் உரிமையாளர்களில் ஒருவராக உள்ளார்.

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக வெயின் பிராவோ இருந்து வந்தார். பயிற்சி சீசன் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 2019 கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆல்-ரவுண்டரான பொல்லார்டு கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொல்லார்டு இதற்கு முன் பார்படோஸ் டிரிடென்ட்ஸ், செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிகளுக்காக விளையாடிள்ளார். தற்போது முதன்முறையாக டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com