கொரோனா வைரசை பசுவின் கோமியம் கட்டுப்படுத்துமா?

கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுவின் கோமியம் மருந்தாக பயன்படுத்தலாம் என சமூகவலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
பசு கோமியம்
பசு கோமியம்
Published on

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பெருமளவு உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. நமது நாட்டில் இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளைப்பூண்டு, கிராம்பு, கறிவேப்பிலை மற்றும் பசுவின் கோமியம் மருந்தாக பயன்படுத்தலாம் என சமூகவலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால் இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

X

Maalai Malar
www.maalaimalar.com