சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
Published on

சென்னை:

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதாக சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் மீது கொடுக்கப்பட்ட புதிய புகார்களின் அடிப்படையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருத்தணிகாசலம் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம், திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com