கல்யாணமா முக்கியம்? கிரிக்கெட்டை பார்ப்போம்...

அமெரிக்காவில் புதுமணத் தம்பதியர் திருமணமான கையோடு பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை டி.வி.யில் ஆர்வமுடன் பார்க்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
திருமணம் முடிந்த கையோடு கிரிக்கெட் பார்க்கும் பாகிஸ்தான் தம்பதியர்
திருமணம் முடிந்த கையோடு கிரிக்கெட் பார்க்கும் பாகிஸ்தான் தம்பதியர்
Published on

நியூயார்க்:

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அந்நாட்டு அணியுடன் 3 டி20 போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி 20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி நேற்று முன்தினம் (நவம்பர் 5) கான்பெர்ராவில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. 

கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களையும், இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி  ஆட்டமிழக்காமல் 34 பந்தில் 62 ரன்கள் விளாசியதால் பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது. 

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது திருமண விழா நடந்து கொண்டிருந்த போதும் மணப்பெண்ணுடன் இணைந்து ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் டி20 போட்டியை டி.வி.யில் கண்ணிமைக்காமல் கண்டுகளித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹசன் தஸ்லிம் அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் வசித்துவருகிறார். அவருக்கு கடந்த 5-ம் தேதி திருமணம் நடந்தது. 

தங்கள் திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை சுவாரசியமாக கண்டுகளித்தனர். 

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது டுவிட்டர் பக்கத்தில், தம்பதியர் கிரிக்கெட் பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘தம்பதியரின் இலக்கு’ என்ற ஹேஷ்டேக்குடன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com