அமெரிக்காவில் இருந்து வந்த தம்பதிக்கு கொரோனா அறிகுறி- ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை

அமெரிக்காவில் இருந்து வந்த தம்பதிக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அவர்கள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களால் கண்காணிக்கப்படுகிறார்கள்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

ராயபுரம்:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

வீடுகளிலும், ராஜீவ் காந்தி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். நேற்று முன்தினம் அமெரிக்காவில் இருந்து வந்த தம்பதிக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

சென்னை முகப்பேரை சேர்ந்த 74 வயது ஆணுக்கும், 70 வயது பெண்ணுக்கும் சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இருவரும் தனித்தனியாக டாக்டர்களால் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கிண்டி கிங் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் புனேவில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவ முடிவு வந்த பிறகு தான் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சொல்ல முடியும். ஆனால் கணவன் - மனைவி இருவரும் நன்றாக இருக்கிறார்கள் என்று ஸ்டான்லி மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com