

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி,ஸ்பெயின்,ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை நிலவரப்படி உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை
15 ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் மேலும் பரவாத வகையில் கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரும் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று நள்ளிரவில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பிறமாநிலங்களை இணைக்கும் எல்லைகளை சீல் வைக்கப்படும். அத்தியாவசியமான உணவுப்பொருள் சப்ளை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பஞ்சாப் மாநிலம் முழுவதும் இன்றிரவு முதல் வரும் 31-ம் தேதி வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
கேரளா மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் அம்மாநிலம் முழுவதும் இன்றிரவு முதல் வரும் 31-ம் தேதி வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். பிறமாநிலங்களை இணைக்கும் எல்லைகள் அடைக்கப்படும். வெளிமாநில வாகனங்கள் கேரளாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.