சென்னையில் வேகமாக பரவும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 6,288 பேருக்கு பாதிப்பு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் 41 ஆயிரத்து 172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 601 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,288 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோடம்பாக்கத்தில் 4,485 பேருக்கும், திரு.வி.க.நகரில் 3,532 பேருக்கும், அண்ணாநகரில் 4,385 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 5,116 பேரும், தேனாம்பேட்டையில் 4,967 பேரும், திருவொற்றியூரில் 1,545 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,719 பேருக்கும், பெருங்குடியில் 854 பேருக்கும், அடையாறில் 2,435 பேருக்கும், அம்பத்தூரில் 1,519 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 880 பேருக்கும், மாதவரத்தில் 1,135 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 775 பேருக்கும், மணலியில் 581 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com