கொரோனா மீட்பு விகிதம் உயர்கிறது- புதிதாக குணமடைவோரில் 77 சதவீதம் கொண்ட 10 மாநிலங்கள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதிதாக குணமடைந்தவர்கள் அதிகம் உள்ள 10 மாநிலங்கள்
புதிதாக குணமடைந்தவர்கள் அதிகம் உள்ள 10 மாநிலங்கள்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76.5 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 717 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,15,914 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67.9 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 61,775 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர். 

சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை கடந்த 2 தினங்களாக 7.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. 

14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. தேசிய அளவில் உயிரிழப்பு விகிதம் 1.51 சதவீதமாக சரிந்துள்ளது. 

தேசிய மீட்பு விகிதம் 89 சதவீதத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 77 சதவீதம் 10 மாநிலங்களில் பதிவாகி உள்ளது. கர்நாடகத்தில் அதிக அளவாக 8500 பேர் குணமடைந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான 717 மரணங்களில், 82 சதவீதம் 10 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. நேற்றைய உயிரிழப்பில் 29 சதவீதம் மகாராஷ்டிராவில் (213 மரணம்) பதிவாகி உள்ளது. கர்நாடகா 66 மரணங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50 உயிரிழப்புகளுடன் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. 

இதுதொடர்பான புள்ளிவிவர வரைபடங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com