கொரோனா வைரஸ்- இந்தியாவில் முதல் முறையாக ஆக்டிவ் கேஸ்களை விட குணமடைந்தவர்கள் அதிகரிப்பு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள்
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் இதுவரை 276583 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9985 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7745 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 133632 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை 135206 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 48.8 சதவீதமாக உள்ளது. அத்துடன், முதல் முறையாக மருத்துவமனையில் உள்ள நோயாளிகளைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமான சாம்பிள்கள் பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக டெஸ்ட் செய்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா, பிரேசில், ரஷியா, பிரிட்டனைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com