கொரோனா பாதிப்பு- வீடு திரும்பிய காஞ்சிபுரம் என்ஜினீயருக்கு மீண்டும் சிகிச்சை

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய காஞ்சிபுரம் என்ஜினீயர் இன்று மீண்டும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி
Published on

சென்னை:

ஓமனில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பிய காஞ்சிபுரம் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பயனாக குணமடைந்த அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் அவர் இன்று மீண்டும் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com