2 வாரங்களாக நானே தனிமையில் இருக்கிறேன்- கமல்ஹாசன்

கொரோனா வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் 2 வாரமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசனின் வீட்டில் நேற்று இரவு கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் இந்த நோட்டீசை ஒட்டியுள்ளனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கமலின் பழைய முகவரி என தெரியாமல் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் சிறிய தவறு நடந்திருப்பதாக மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை. ஆனால் வருமுன் தடுக்க நானே 2 வார காலமாக தனிமைப்படுத்துலை மேற்கொண்டுள்ளேன் என்று கமல்ஹாசன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் அன்பு உள்ளம் கொண்டோர் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com