கொரோனா பாதிப்பு- ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறிய ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் கொரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலத்திலிருந்து அடுத்தகட்டமாக ஆரஞ்சு நிற மண்டலத்திற்கு மாறியுள்ளது. இதனை கலெக்டர் திவ்யதர்ஷினி உறுதி செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம்
Published on

ராணிப்பேட்டை:

அதிக அளவில் கொரோனா பாதித்த மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு மண்டலமாகவும் பாதிப்பு குறைவான, இல்லாத மாவட்டத்தை பச்சைநிற மண்டலம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39 ஆக இருந்தது.

அவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 33 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளில் தனிமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6 பேரில் ஒருவர் வேலூர் அரசு மருத்துவமனையிலும் மற்ற 5 பேர் வேலூர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு அடுத்த பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மருத்துவ குழு முடிவு செய்வார்கள்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் 39 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ததால் ராணிப்பேட்டை மாவட்டம் சிவப்பு மண்டலமாக இருந்தது.

இவ்வாறு சிவப்பு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் 14 நாட்கள் தொடர்ந்து புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லையெனில் மாவட்டம் ஆரஞ்சு நிறம் மண்டலத்திற்கும் 28 நாட்களில் புதிய பாதிப்பு இல்லை எனில் பச்சை நிற மண்டலத்திற்கும் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது

ராணிப்பேட்டை மாவட்டம் கொரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலத்திலிருந்து அடுத்தகட்டமாக ஆரஞ்சு நிற மண்டலத்திற்கு மாறியுள்ளது. இதனை கலெக்டர் திவ்யதர்ஷினி உறுதி செய்துள்ளார்.

இதே நிலை அடுத்த 12 நாட்களும் நீடித்தால் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து பச்சை நிற மண்டலத்திற்கு மாற வாய்ப்புள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com