

மேலூர்:
மேலூர் அழகர்கோவில் அறநிலைய துறை நிர்வாகம், கேட்டு கொண்டதன் பேரில் அ.வல்லாளபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக அழகர்கோவில் கோட்டை வாசல் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சாலைகளின் இருபுறங்களிலும், தீயணைப்பு துறை டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளித்தனர்.
இதனை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, அ.வல்லாளபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி, அழகர்கோவில் அறநிலைய துறை அதிகாரிகள் அனிதா, வெங்கடாசலம், வலையபட்டி ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, அ.வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம்.
சார்பு ஆய்வாளர் பழனியப்பன், கிடாரிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், தீயணைப்பு துறை நிலை அலுவலர் அங்கு ராஜா, தீயணைப்பு வீரர்கள், வலையபட்டி ஊராட்சி செயலர் அழகேந்திரன், அ.வல்லாளபட்டி தூய்மை பணியாளர்கள், சுய உதவி குழு தூய்மை பணியாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் ஆகியோர் மருந்து தெளிப்பு பணியை துரிதப்படுத்தினர்.