திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் உயிரிழந்தார்.
திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான்
திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான்
Published on

சென்னை:

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com