வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 24 நாட்கள் தீவிர கண்காணிப்பு- கலெக்டர் மகேஸ்வரி

வெளிநாடுகளிலிருந்து இருந்து வருபவர்கள் 24 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.
கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்
கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்
Published on

பொன்னேரி:

பழவேற்காட்டில் மாணவர் காவல் படை சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் மாணவர்களுடன் சென்று கடற்கரையில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது கலெக்டர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

மலேசியாவிலிருந்து வந்த மணவூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா வைரஸ் உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை, எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிப்பதற்காக தனி அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு யார் வந்தாலும் அவர்கள் உடனடியாக மருத்துவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு 24 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com