சென்னை மக்களை வீட்டுக்குள் முடக்கி போட்ட ‘கொரோனா’

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவும் வைரஸ் என்பதால் கொரோனா வைரஸ் தொடர்பான பீதி சென்னை மக்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது.
வெறிச்சோடிய தியாகராய நகர் உஸ்மான் ரோடு.
வெறிச்சோடிய தியாகராய நகர் உஸ்மான் ரோடு.
Published on

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கடந்த 16-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதற்காக வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் மற்றும் நகை கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவும் வைரஸ் என்பதால் கொரோனா வைரஸ் தொடர்பான பீதி சென்னை மக்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் கடந்த 5 நாட்களாக சென்னையில் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போயுள்ளது. குறிப்பாக தி.நகர் ரங்கநாதன் தெருப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கும் கொரோனா, வைரஸ் எப்போது, எந்த ரூபத்தில் வரும் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மத்தியில் கொரோனா பீதி தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் வெளியில் வருவதற்கு மக்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com