கொரோனாவுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழப்பு

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
ஸ்டான்லி மருத்துவமனை
ஸ்டான்லி மருத்துவமனை
Published on

சென்னை:

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 559 பேருக்கு தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது. 6,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106-ஆக உள்ளது.

இந்நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு இன்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

திருவொற்றியூரை சேர்ந்த 34 வயது ஆண், வியாசர்பாடியை சேர்ந்த 45 வயது ஆண், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 68 வயது முதியவர், புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 77 வயது முதியவர் என 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com