திருவாரூரில் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,967ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
Published on

திருவாரூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4,816 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,967ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 3,857 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com