திருவாரூரில் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,100ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

திருவாரூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,996 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,100ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 3,252 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com