திருவள்ளூரில் 469 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 469 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 9,579 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
Published on

திருவள்ளூர்:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,17,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,481-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85,859 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 9,110 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 469 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,579 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 5,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 159 பேர் உயிரிழந்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com