கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பை சந்தித்த திருச்சி

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டம்
Published on

திருச்சி:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 13,170 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 184-ஆக உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15,776 ஆக அதிகரித்துள்ளது. 8,181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 138-ஆக உள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுவரை திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆக உள்ளது. 70 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com