மதுரையில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,140 ஆக உள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

மதுரை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,140 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 16,986 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 410 பேர் உயிரிழந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com