50 பேருக்கு கொரோனா பாதிப்பு - 34 பேர் மட்டுமே இந்தியர்கள்: மத்திய அரசு புதிய தகவல்

நமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட 50 பேரில் 34 பேர் மட்டுமே இந்தியர்கள், 14 பேர் இத்தாலி நாட்டினர் என மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆலோசனை
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆலோசனை
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது.

கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் அருகாமையில் உள்ள வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாட்டு எல்லைப்பகுதிகளை மூடுவதாக மிஜோரம் அரசு நேற்று அறிவித்தது.

இதைதொடர்ந்து, அண்டைநாடான மியான்மர் நாட்டின் எல்லைப்பகுதி நுழைவு வாயில்கள் மூடப்படுவதாக மணிப்பூர் அரசு இன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், நமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட 50 பேரில் 34 பேர் மட்டுமே இந்தியர்கள் மீதமுள்ள 14 பேர் இத்தாலி நாட்டினர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குமார் இன்று மாலை தெரிவித்துள்ளார்.

நமது நாட்டில் இந்நோயின் தாக்கத்தால் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com