

கிருஷ்ணகிரி:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 28,641 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 625-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37,070 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 44 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.