கிருஷ்ணகிரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

கிருஷ்ணகிரி:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 26,782 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 428-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 41 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com