பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா உறுதி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

நெல்லை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,909 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 133-ஆக உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது. 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95-ஆக உள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள 2 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறைகளை தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையிலும் கைதிகளுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 301 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 146 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com