

பெரம்பலூர்:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 37,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 866-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45,814 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில்பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 168 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 146 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.