போக்குவரத்துக் கழக பணியாளர்கள் ரூ.14 கோடி கொரோனா தடுப்பு நிதியுதவி - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் பணியாளர்கள் சார்பில் 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 492 ரூபாய் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பு பணிகளுக்கு என முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து, கடந்த 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையிலான 7 நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள் வருமாறு:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் பணியாளர்கள் சார்பாக 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 492 ரூபாயும், அடாஸ் சின்டல் ப்ரெயாஸ் கூட்டமைப்பு 5 கோடி ரூபாயும், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 5 கோடி ரூபாயும், சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் 3 கோடி ரூபாயும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் 2 கோடி ரூபாயும், டீயூப் இண்வெஸ்ட்மெண்ட்ஸ் 2 கோடி ரூபாயும், அ.தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாயும், காமராஜர் துறைமுகம் 1 கோடி ரூபாயும், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் 1 கோடி ரூபாயும், ஈச்சர் குரூப் 1 கோடி ரூபாயும் நன்கொடை வழங்கி உள்ளது.

நடிகர் அஜித்குமார், டால்மியா சிமெண்ட் பாரத் நிறுவனம், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் நிறுவனம், கோரமண்டல் எலக்ட்ரிக் கம்பெனி நிறுவனம், தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், ஓ.எல்.ஏ. பவுண்டேஷன், செயின்ட் கோபென் ஆகியோர் தலா ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன், சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம், பி அன்ட் சி புராஜெக்ட்ஸ் நிறுவனம், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், ஆர். ஆனந்தகிருஷ்ணன், டோட்லா டைரி நிறுவனம் ஆகியோர் தலா ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளனர்.

தமிழ்நாடு ஸ்ரீ சீர்வி சமாஜ் மஹா சபா 21 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயும், பூலிங் ஏசி 20 லட்சம் ரூபாயும், விஜயா மருத்துவமனை 15 லட்சம் ரூபாயும், வி.சத்தியமூர்த்தி கோ 12 லட்சம் ரூபாயும், சி.எம்.கே. புராஜெக்ட்ஸ் பிரைவேட் நிறுவனம் 12 லட்சம் ரூபாயும், ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரி (சம்பள கணக்கு) 11 லட்சத்து 61 ஆயிரத்து 790 ரூபாயும், தி கரூர் வைஸ்யா வங்கி 11 லட்சம் ரூபாயும், அகர்வால் ரிலீப் அன்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் 11 லட்சம் ரூபாயும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 10 லட்சத்து 52 ஆயிரத்து 768 ரூபாயும், ஸ்ரீவெங்கடாச்சலபதி அன்ட் கோ 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும் நன்கொடை வழங்கி உள்ளனர்.

மேலும், சுந்தரபரிபூரணன் பக்சிராஜன், கணேஷ் நடராஜன், ஜெயப்ரியா சிட்பண்ட் பிரைவேட் நிறுவனம், தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்புகளின் சங்கம், தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம், கொங்குநாடு ஹாஸ்பிடல் பிரைவேட் நிறுவனம், ஸ்ரீ காளஸ்வரி பயர் ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம், அரவிந்ந் லேபாரட்டரிஸ், டி.சி.எஸ்.ஆர்.டி., சரளா கிருஷ்ணன், ரகுநாத் ஜி சுப்ரமண்யன், இ.வேலு, பிஸ்மி பிஷரீஸ், இந்தியன் மெட், எம்.எஸ்.தி.இந்தியன் ஆபீசர்ஸ் அசோசியேஷன், சுந்தரவேல் மார்க்கெட்டிங் கம்பெனி, வெரிஷான் டேட்டா சர்வீசஸ் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளனர்.

கடந்த 7 நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 54 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 940 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் ஆகும்.

நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com