

வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சத்தியவாடி கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர் விழுப்புரத்தில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கி இருந்த போது காய்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர் சொந்த கிராமத்தில் ரைஸ் மில்வைத்துள்ளதால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அருங்குணம் கிராமத்தில் உள்ளதாலும் அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் ரைஸ்மில்லுக்கு வந்தவர்கள் என 52 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தெள்ளார் வட்டார மருத்துவ அலுவலர் செல்வமுத்து குமாரசாமி, மருத்துவர் பிரோமா ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அவர்களது சளி மாதிரிகளை ஆய்வுக்கு சென்னை கிண்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சத்தியவாடி, அருங்குணம் கிராமத்தில் சுகாதார பணியை முடுக்கி விட்டுள்ளனர். சுகாதார பணிகள் முழுமையாக நடக்கின்றதா என தெள்ளார் ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், பி.டி.ஓ.க்கள் காந்திமதி, குப்புசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.