கரூர் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா

கரூர் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கரூர்:

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 36 வயது ஆண், வெங்கமேட்டை சேர்ந்த 54 வயது ஆண், 65 வயது முதியவர், உப்பிடமங்கலத்தை சேர்ந்த 37 வயது பெண், தாந்தோணிமலையை சேர்ந்த 55 வயது பெண், 21 வயது பெண், புலியூரை சேர்ந்த 48 வயது ஆண், தளவாபாளையத்தை சேர்ந்த 54 வயது ஆண், வெண்ணைமலையை சேர்ந்த 35 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காந்திகிராமத்தை சேர்ந்த 68 வயது முதியவர், 40 வயது ஆண், வாங்கபாளையத்தை சேர்ந்த 26 வயது ஆண், தென்னிலையை சேர்ந்த 50 வயது பெண், 72 வயது மூதாட்டி, 40 வயது பெண் உள்பட 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 15 பேர் குணமடைந்ததை தொடர்ந்து, அவர்கள் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com