ஹோலி பண்டிகை கொண்டாட இத்தாலி செல்லும் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை இத்தாலியில் உள்ள பாட்டி வீட்டில் கொண்டாடப் போவதாகத் தெரிவித்துள்ளார். #Holi #rahulgandhi
ஹோலி பண்டிகை கொண்டாட இத்தாலி செல்லும் ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி;

இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சிறுவர், சிறுமியர் மட்டுமின்றி ஆண்களும், பெண்களும் குழந்தைகளாய் மாறி ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி மகிழ்வார்கள்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை இத்தாலியில் உள்ள பாட்டி வீட்டில் கொண்டாடப் போகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், ‘இந்தாண்டு ஹோலி பண்டிகையை டெல்லியில் கொண்டாடாமல் இத்தாலி செல்ல திட்டமிட்டுள்ளேன். ஹோலி விடுமுறைக்கு 93 வயதான எனது பாட்டியை சந்திக்க இத்தாலி செல்லப் போகிறேன். அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். இந்த எதிர்பாராத பயணம் எனது பாட்டியை வியப்பில் ஆழ்த்தும். அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டமாக இந்த ஹோலி பண்டிகை அமையட்டும்’ என பதிவிட்டுள்ளார். #Holi #rahulgandhi #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com