பிரியங்கா காந்தி பிறந்தநாள் - காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து

காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பிரியங்கா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவரது கணவரும் தொழில் அதிபருமான ராபர்ட் வதேரா சமூகவலைத்தளத்தில் கூறியுள்ள வாழ்த்து செய்தியில் ‘இந்த ஆண்டு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைவும், உடல்நலன் சிறக்கவும் வாழ்த்துகள். ஒவ்வொரு நாளும் குடும்பம் உங்களுடன் வலிமையாக நிற்கிறது’ என்றார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பிரியங்கா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரியங்காவின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை முன் உள்ள ஏழைகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் போர்வைகளை வழங்கினார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com