பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ்-தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ்-தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம்
Published on

ராமநாதபுரம்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி அரண்மனை முன்பு நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், தி.மு.க. பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் தலைவர் கோபி முன்னிலையில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கடைவீதிகளில் ஊர்வலமாக சென்று பெட்ரோல், டீசல் விலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் வகையில் மக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கினர்.

பின்னர் ராமநாதபுரம் அரண்மணை பகுதியில் இருந்த கடைகளை அடைக்கும்படி வியாபாரிகளிடம் தி.மு.க.-காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அங்கு வந்த போலீசார் ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு இருப்பதை கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தி.மு.க. நகர் செயலாளர் கார்மேகம்,மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் இன்பா ரகு, மாவட்ட வக்கில் பிரிவு தலைவர் அன்பு செழியன், மண்டபம் வட்டார காங்கிரஸ் தலைவர் மேகநாதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com