சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன் 19ம்தேதி முதல் முழு ஊரடங்கு- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன் 19ம்தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
Published on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதுபற்றி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com