காமன்வெல்த் வட்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார் சீமா புனியா - நவ்ஜீத் டில்லியனுக்கு வெண்கலம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் தடகள போட்டியின் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமா புனியா வெள்ளியும், நவ்ஜீத் டில்லியன் வெண்கலமும் வென்றனர். #GC2018 #CWG2018 #WomenDiscusThrow
காமன்வெல்த் வட்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார் சீமா புனியா - நவ்ஜீத் டில்லியனுக்கு வெண்கலம்
Published on

கோல்ட் கோஸ்ட்:

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. 8-வது நாளான இன்று தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கான வட்டு எறிதலின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சீமா புனியாவும், நவ்ஜீத் டில்லியனும் தகுதி பெற்றனர்.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சீமா புனியா 60.41 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான நவ்ஜீத் டில்லியன் 57.43 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கம் வென்றார். தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை டேனி ஸ்டீவன்ஸ் தட்டிச்சென்றார்.

இதன்மூலம், இந்தியா 14 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. #GC2018 #CWG2018 #WomenDiscusThrow #SeemaPunia #NavjeetDhillon

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com