காமன்வெல்த் துப்பாக்கிச்சுடுதல் - இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கம் வென்றார்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கப்பதக்கம் வென்றார். #CommonwealthGames2018 #CWG2018 #SanjeevRajput
காமன்வெல்த் துப்பாக்கிச்சுடுதல் - இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கம் வென்றார்
Published on

கோல்ட் கோஸ்ட்:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். துப்பாக்கிச்சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா 19 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்கள் வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. #CWG2018 #CWGBoxing #SanjeevRajput

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com