

காமன்வெல்த் போட்டியில் இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. குத்துச் சண்டையில் ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவிற்கான காலிறுதி ஒன்றில் இந்திய வீரர் முகமது ஹுசாமுதின் ஜாம்பியாவின் எவரிஸ்டோ முலெங்காவை எதிர்கொண்டார். இதில் முகமது 30-26, 30-26, 30-26, 30-25, 30-26 (5-0) என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் முன்னேறியதன் மூலம் குறைந்தது வெண்கல பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
46 முதல் 49 வரையிலான வயதிற்குரிய பிரிவில் இந்திய வீரர் அமித் ஸ்காட்லாந்தின் அகுயீல் அஹதுவை எதிர்கொண்டார். இதில் அமித் 29-28, 30-27, 30-27, 28-29, 30-27 (4-1) என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் இவரும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தனர்.
91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் நமன் தன்வர் சமோயாவின் பிராங்க் மசோயி-ஐ எதிர்கொண்டார். இதில் தன்வர் 30-25, 30-26, 30-24, 30-24, 30-24 என வெற்றி பெற்றார். இதனால் தன்வரும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் மூன்று பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.