65 தங்கத்துடன் 168 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடம், இந்தியாவிற்கு 3-வது இடம்

காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலியா 65 தங்கத்துடன் 168 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #CWG2018 #GC2018
65 தங்கத்துடன் 168 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடம், இந்தியாவிற்கு 3-வது இடம்
Published on

தொடக்க நாளில் இருந்தே போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இன்றோடு 13 நாட்கள் ஆட்டம் முடிந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 65 தங்கம், 49 வெள்ளி, 54 வெண்கலத்துடன் 168 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 31 தங்கம், தலா 34 வெள்ளி, வெண்கலத்துடன் 99 பதக்கங்கள் வென்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.

மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா 17 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலத்துடன் 42 பதக்கங்கள் பெற்று 3-வது இடத்தில் தொடர்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com