பாரதிதாசன் பல்கலை. - புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய குழு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு, புதிய துணைவேந்தரை நியமிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம்
Published on

திருச்சி:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு, புதிய துணைவேந்தரை நியமிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதன்படி, 3 பேர் கொண்ட துணைவேந்தர் தேர்வுக் குழுவிற்கு ஆட்சிமன்றக்குழு பிரதிநிதியாக அழகப்பா பல்கலைக்கழக கல்வி தொழில்நுட்பத்துறை முன்னாள் தலைவர் மோகன் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில், செனட் பிரதிநிதியாக காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அழகப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் அரசு பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டதும், மூவரும் இணைந்து புதிய துணைவேந்தரை பரிந்துரை செய்வார்கள். இவர்களின் பரிந்துரையின் படி, தமிழக ஆளுநர் துணைவேந்தரை நியமனம் செய்ய உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com