திருப்பூரில் வி‌ஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

திருப்பூரில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம்
விஷம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் அருகே உள்ள ரங்கேகவுண்டம்பாளையத்தை சேர்ந்த வர்கணேசன்(47). இவரது மகள் ரீனா(19). இவர்அவினாசி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீர் என மாணவி சாணிப்பவுடரை தண்ணீரில் கரைத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த ரீனாவை பெற்றோர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள், பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருப்பூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com