விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்

விழுப்புரம் அருகே வீட்டில் இருந்து வெளியே சென்ற கல்லூரி மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
கடத்தல்
கடத்தல்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள சாலையாம்பாளையத்தை சேர்ந்த 19 வயதுடைய மாணவி, விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் பெற்றோர் தேடியும், கிடைக்கவில்லை. 

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த மவுரிஸ் (20) என்பவர் அவரது சகோதரர்களான முகேஷ், மவுலி ஆகியோரின் துணையுடன் கடத்திச்சென்றிருக்கலாம் என கூறியிருந்தனர். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com