துவரை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கொள்முதல் வசதி- கலெக்டர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் துவரை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கொள்முதல் வசதி செய்து தரப்படும் என்று கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் வினய்
கலெக்டர் வினய்
Published on

மதுரை:

மதுரை மாவட்டத்தில் 2019-2020-ம் ஆண்டு துவரை சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து துவரை கிலோ ஒன்றுக்கு ரூ.58-க்கு கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் விளைவித்த துவரை பயிறை நன்கு சுத்தம் செய்து உலர்த்தி திருமங்கலம், வாடிப்பட்டி மற்றும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஒப்படைத்து கிலோ ஒன்றுக்கு ரூ.58-ஐ பெறலாம்.

மதுரை மாவட்டத்தில் துவரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா அடங்கல், ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நகலுடன் திருமங்கலம், வாடிப்பட்டி மற்றும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இப்போதே பதிவு செய்திடலாம்.

விவசாயிகள் மேற்கண்ட விவரங்களுடன் துவரை பதிவு செய்திடலாம். விவசாயிகள் மேற்கண்ட விவரங்களுடன் துவரை பயிறை கொண்டு வரும்போதும் பதிவுகள் செய்து கொள்ளலாம். பதிவு செய்து விவசாயிகளிடம் இருந்து துவரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் துவரை ஈரப்பதம் இதர பொருட்களின் கலப்பு, இதர தானியங்களின் கலப்பு, சேதமடைந்த பயறு, சுருங்கிய பயறு, வண்டு தாக்கிய பயறு ஆகியவற்றை தரப்பரி சோதனை செய்து கொள்முதல் அனுமதிக்கப்படும். கொள்முதல் அனுமதிக்கப்பட்ட பாசிப்பயறுக்கான தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

கொள்முதல் பணியை மார்ச் 14-ந் தேதி வரை செய்ய அரசு உத்தரவு பெறப்பட்டுள்ளதால் விரைவாக செயல்பட்டு பயன்பெறுமாறு மதுரை மாவட்ட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி பொருள் தொடர்பாக திருமங்கலம் பகுதி விவசாயிகள் 8110054595 என்ற எண்ணிலும், உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் 7010280754 என்ற எண்ணிலும், வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் 9600802823 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை விற்பனைத்துறை உதவி வேளாண் அலுவலர் களிடமும், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்று பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com